General Category > Tamil Bible

யாருடைய விசுவாசம் பெரியது?

(1/14) > >>

love_all:
ஆபிரகாமா? இல்லை யோபுவா? யார் விசுவாசம் பெரியது? ஆபிரகாம் ஏன் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார் ?

udaya:
யோபுவின் விசுவாசமே பெரியது . ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை தருவதாக தேவனாகிய கர்த்தர் வாக்கு கொடுத்திருந்தார் . யோபுக்கு அவ்வாறு இல்லை . மேலும் ஆபிரகாமுக்கு துக்க துயர வேதனையான சூழ்நிலை இல்லை.

love_all:
பின்பு எதற்காக ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது?

udaya:
தெரியவில்லை . எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் . தவறானால் திருத்தவும் .
செல்வந்தனான ஆபிரகாம் கானான் தேச வாக்குத்தத்திற்கு இசைந்து , தன் ஐசுவரியத்தையெல்லாம் துறந்து பரதேசியாய் கானானுக்கு போனான். எனினும் , கடைசியில் தன் மனைவி சாராள் காலமானபோது அவளது உடலை அடக்கம் செய்யக்கூட இடமில்லாமல் , 400 பணம் கொடுத்து இடம் வாங்கி அடக்கம் செய்ய வேண்டியதாகிவிட்டது. அந்த தருணத்தில்கூட ஆபிரகாம் பரதேசியாய்தான் இருந்ததான் (ஆதியாகமம் 23:4) . ஆயினும் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்.
இது காரணமாக இருக்க கூடும் .

udaya:
இன்னொரு காரணம் :
முதிர் வயதில் சாராள் மூலம் பெற்ற ஏகசுதனான ஈசாக்கை, கடவுளின் கட்டளையை ஏற்று பலி கொடுக்க முன்வந்தான்.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version