General Category > Tamil Bible

பைபிள் கடவுளை மனித தரத்தில் பார்க்கிறதா??

<< < (2/7) > >>

Chandruparkulan:
இதில் எவ்வசனமும் தேவனின் தரத்தை குறைக்கும்படி காணப்படவில்லை. தொடைச்சந்து நரம்பை குறித்து இப்படி சொன்னீர்கள் என்றால் அது புரிதலில் உள்ள தவறேயாகும்.

udaya:
மன்னிக்க வேண்டும்........தொடைச்சந்து நரம்பை நான் குறிப்பிடவில்லை . தேவன் யாக்கோபுடன் போராடியதை குறிப்பிடுகிறேன் . ஒரு மனிதனுடன் போராடி அவனால் மேற்கொள்ளப்படும் அளவிற்கா தேவன் இருந்தார் ?
இவ்வசனம் தேவனின் தரத்தை குறைக்கும்படி காணப்படுவதாக நான் நினைக்கின்றேன் .

Chandruparkulan:
வேதத்தை படிக்கும் போது அதன் மொழி நடை மிகவும் முக்கியமானது. ஆதி :32:24,25,26 ல் சொல்லப்பட்டது போராட்டம் தான் ஆனால் நீங்கள் எண்ணுகிற போராட்டம் அல்ல. இவ்வசனங்களை தெளிவாக படித்தால் அர்த்தம் புரியும். 26 ல் என்னை ஆசிர்வதித்தால் ஒழிய உம்மை விடுவதில்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. தேவன் யாக்கோபோடு போராடி மேற்கொள்ளாதது தேவனின் தரத்தை குறைக்கும்படி அவ்விடத்தில் காணப்படவில்லை. அங்கு தேவன்பால் யாக்கோபிற்கு உள்ள
பற்றுதலையும் உறுதியையுமமே குறிக்கிறது.

udaya:
"உயிர் தப்பிப் பிழைத்தேன்"என்று யாக்கோபு கூறும் அளவிற்கு இருவரும் விடியுமளவும் போராடியிருக்கிறார்கள். Physical activity !

Chandruparkulan:
அந்த வசனத்தை முழுமையாக படித்தால் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.  It's not physical activity.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version