Author Topic: ஏன் கர்த்தர் , மோசேயை கொல்லப்பார்த்தார்?  (Read 2853 times)

Jayakumar

  • Newbie
  • *
  • Posts: 2
    • View Profile
24 வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப்பார்த்தார்.
யாத்திராகமம் 4:24


Magimaidass

  • Guest
Virutha sethanam panamal irunthar.

Jayakumar

  • Newbie
  • *
  • Posts: 2
    • View Profile
விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்று கர்த்தர் கட்டளை ஏதும் மோசேக்கு
கொடுக்கவில்லையே?

Wilson

  • Newbie
  • *
  • Posts: 6
    • View Profile
Good Question Br.
Please see the answer below:

மோசே தன் மனைவி சிப்போராளோடும் கெர்சோம், எலியேசர் என்ற தன் இரு குமாரர்களோடும் எகிப்துக்கு செல்லும் வழியில் ஒரு சம்பவம் நடந்தது: ?வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப் பார்த்தார். 

Wilson

  • Newbie
  • *
  • Posts: 6
    • View Profile
அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து [?அது அவருடைய பாதங்களில் படும்படி செய்து,?]: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

Wilson

  • Newbie
  • *
  • Posts: 6
    • View Profile
பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.? (யாத்திராகமம் 4:20, 24-26)

இந்தப் பகுதி பளிச்சென புரிந்துகொள்ள முடியாதபோதிலும், அதன் அர்த்தம் என்னவென உறுதியாக சொல்ல முடியாதபோதிலும், இந்த வசனங்களை பைபிள் ஓரளவுக்குத் தெளிவுபடுத்துகிறது.

Wilson

  • Newbie
  • *
  • Posts: 6
    • View Profile
யாருடைய உயிர் ஆபத்திலிருந்தது என அந்தப் பதிவு தெள்ளத் தெளிவாக சொல்வதில்லை. எனினும் அப்போது மோசேயின் உயிர் ஆபத்தில் இருக்கவில்லை என்ற நியாயமான முடிவுக்கு வரலாம்; ஏனெனில் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி அப்போதுதான் கடவுள் அவரை நியமித்திருந்தார். (யாத்திராகமம் 3:10)

Wilson

  • Newbie
  • *
  • Posts: 6
    • View Profile
அப்படி அந்தப் பொறுப்பை நிறைவேற்றச் செல்லும் வழியில் கடவுளுடைய தூதன் மோசேயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முனைந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. எனவே அவருடைய குமாரர்களில் ஒருவருடைய உயிரே ஆபத்தில் இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் விருத்தசேதனம் குறித்து ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் இவ்வாறு குறிப்பிட்டது:

Wilson

  • Newbie
  • *
  • Posts: 6
    • View Profile
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.? (ஆதியாகமம் 17:14)

மோசே தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்யாமல் அசட்டையாக இருந்ததாய் தெரிகிறது; எனவே அந்தப் பையனின் உயிருக்கு யெகோவாவின் தூதனால் ஆபத்து ஏற்படவிருந்தது.
« Last Edit: March 22, 2022, 05:18:19 PM by Wilson »