General Category > Tamil Bible

யார் கடவுள் கிருஸ்துவ மதத்தில்?

<< < (2/5) > >>

udaya:
யார் கடவுள் கிருஸ்துவ மதத்தில்?

ஏன் இந்த சந்தேகம்......?

பரிசுத்த வேதாகமத்தின் கூற்றுப்படி , தேவனாகிய கர்த்தர் " தான் " ஒருவர் மட்டுமே கடவுள் என்று கூறுகிறார்.

வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:18

நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
ஏசாயா 45:5

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:6

மட்டுமல்ல......அவருக்கு இணையானவர் யாருமில்லை என்று வேதாகமம் கூறுகிறது.(no trinity !!!!)

முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
ஏசாயா 46:9

அவருக்கு பிறகும் யாரும் இருக்கப்போவதில்லை என்றம் கூறுகிறது.
(புதிய ஏற்பாட்டில்... ? )

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
ஏசாயா 43:10

பாவங்களை மன்னிப்பவர்.......

நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
ஏசாயா 43:25

அவரைத்தவிர வேறு ரட்சகர் இல்லை....

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
ஏசாயா 43:11
(நான் ..நானே.. என்ற அழுத்தத்தை கவனிக்கவும் )

அவர் தன் மகிமையை யாருக்கும் கொடுக்கவில்லை ! !

என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன், என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக்கு குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
ஏசாயா 48

ஒருவராய் எல்லாவற்றையும் படைத்தவர்....(மூவரல்ல..!!)

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

ஏசாயா 44



யார் கடவுள் என்பதை வேதாகமம் இவ்வாறாகவும் இதைவிட அழுத்தமாகவும் கூறுகிறது.

Prawin Lukanus Santhanara:
26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
ஆதியாகமம் 1:26

This verse in the old testament itself clearly indicates god is not one but three in one. Jesus said in john 14:9 and 10:30 that he and god are one. Hence God is one that exhibits three characters.

udaya:
ஆதியாகமம் 3:22
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,

ஆதியாகமம் 1:26 ல் சொல்லப்பட்டிருக்கும் "நமது" என்பது Trinity யைக் குறிக்குமானால் , ஆதியாகமம் 3:22  ல் சொல்லப்பட்டிருக்கும் "நம்மில்" என்பதும் Trinity யைக் குறிக்கும் !?!? அப்படியானால் ,  ஆதியாகமம் 3:22  படி மனிதன் Trinity யில் ஒருவரைப்போல் ஆகிவிட்டானா ?

udaya:
.

Judah:
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1

வார்த்தை = இயேசு

இந்த வார்த்தையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது இயேசுவே தேவன் என்று.

இந்த கேள்வியை கேட்டு சகோதரனே உங்களை இயேசு நேசிக்கிறார்.
இயேசு இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுடைய பாவத்திற்காகவும் ஏன் உங்களுடைய பாவத்திற்காகவும்தான் மரித்தார்.
ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார்.

அவரை நம்புங்கள் அவர் உங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக, சமாதானமாக நடத்துவார்.

JESUS 💖 YOU

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version