General Category > Tamil Bible

மிஸ்டர் சாத்தான்

(1/3) > >>

udaya:
மிஸ்டர் சாத்தான்....உங்கள எங்கெல்லாம் தேடறது....

பூமியெங்கும் உலவி வரும் (யோபு 1:7) நீங்கள் இந்த கருத்துக்களத்தையும் பார்க்கும் வாய்பு உள்ளது என்று நாங்கள் நம்புவதால், சில கேள்விகளை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறோம்....உங்களுக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியும் என்று நம்பி கேள்விகளுக்குள்ளே போகிறோம்......

1.உங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள உண்மையான உறவு என்ன ?
(பழைய ஏற்பாடடுல ஒரு மாதிரி புதிய ஏற்பாட்டுல வேற மாதிரி நடந்துக்கிறீங்களே!)

2.உங்களுக்கும் கடவுளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை ?
( பிரச்சினையை உட்கார்ந்து பேசி தீர்த்துகறத விட்டுப்போட்டு எங்க மண்டைய போட்டு உருட்டறீங்களே ரெண்டுபேருமா சேர்ந்துகிட்டு ..!)

3.கடவுளுடைய பதவிக்கு நீங்கள் ஆசைப்பட்டதாக காத்துவாக்குல கேள்விப்பட்டோம்.....உண்மைதானுங்களா ?
(உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ! ஏன் வாங்கி கட்டிக்கிறீங்க ! )

4.கடவுளப்போலவே நீங்களும் ஏன் கண்ணுக்குத்தெரியமாட்டேங்கறீங்க ?
(கடவுள பார்க்க ஒரு வழி இருக்கு மத்5:8....உங்களுக்கு என்ன இருக்கு......பாவம் செய்து நரகத்துல உங்கள பார்க்கறத தவிர வேறு என்ன வழி இருக்கு ? )

5.கடவுள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார் ? எங்கள போலவே இருப்பாரா ?
(கடவுள எந்த மனுசனும் பார்த்ததில்லைன்னு பைபிள் சொல்றதாலும் , கடவுள பார்த்திருக்கிற , இந்த பூமியில இன்னும் இருக்கிற ஒரே ஆசாமி நீங்கதாங்கிறதாலும் , உங்கள கேட்டா சரியா இருக்கும்கிறதால கேக்கறோம் )

6.கோபக்கார பிதா , அன்பான குமாரன் ......இவங்க ரெண்டு பேரையும் கம்ப்பேர் பண்ணி 10 வரிகளுக்கு மிகாமல் சொல்லுங்க பார்ப்போம்.
(இவங்க ரெண்டு பேரையும் சந்தித்து பேசி பழகி , எங்கள் மத்தியில் இருக்கிற ஒரே ஆசாமி நீங்கதாங்கிறத உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம் )

7.பாவங்களை அறிக்கை செய்து கடவுளுடன் ஒப்புறவாகி சமாதானமா போனா என்ன கொறஞ்சா போயிடுவீங்க?
(எங்கள விட உங்களுக்கு கடவுளப்பத்தி நல்லாத்தெரியும்......அட்வைஸ் பண்றதா நெனைக்காதீங்க )

8.உங்க நரகம் எங்கிருக்கு ? அவியாத அக்கினிக்கு என்ன எரிபொருள் யூஸ் பண்றீங்க ?எரிபொருள் எங்கிருந்து கிடைக்குது ? கொஞ்சம் சொல்லுங்களேன்.....
(எங்களுக்கும் யூஸ்ஃபுல்லா  இருக்கும் )

9.1000 வருட பாதாள சிறை உங்களுக்கு காத்திட்டிருக்கு....தெரியுமில்ல......அந்த ஆயிர வருட சிறைவாசத்திற்கப்புறம் என்ன செய்யறதா உத்தேசம் ?
(அப்பவாவது குறும்பு செய்யாம இருப்பீங்களா ! )

10.மிஸ்டர் சாத்தான்....கடைசியா ஒரு கொஸ்டியன்......இந்த உலகத்துல உங்க காண்டாக்ட் நம்பர் என்ன ?
(பெர்ஸனல் நம்பர குடுங்க )

பி.கு.  இந்த கருத்துக் களத்துல எதாவது ஒரு யூஸர் நேம் போட்டு உள்ள வந்து பதில் சொன்னீங்கன்னா நன்னா இருக்கும்......பை தி வே....ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் யூஸ் பண்ணுங்க .....காலம் கெட்டுக்கெடக்குது........இப்பெல்லாம் கவர்மென்ட்டே ஹேக் பண்ணுது....

அப்புறம்.....

வாட்ஸ் அப் , ஃபேஸ் புக் , ட்விட்டர் ......இந்த மாதிரி எதிலாவதிலும் எதையாவது எழுதி மாட்டிக்காதீங்க.....பொழிச்சிடுவானுக  பொழிச்சு...
சங்கு ஊதிடுவானுக ....ஜாக்கிரதை....உங்க பதவிக்கு ஆப்பு வச்சாலும்  ஆச்சரியப்படறதுக்கில்ல.......

கடைசியா ஒரு வேண்டுகோள்........கேள்விகளுக்கு பதிலளிக்க பிரியமில்லவிட்டால் பரவாயில்லை....விட்டுவிடுங்க......ஆனா யாராவது எங்களிடத்தில் வந்து ஒரு புத்தகத்தை எங்க கையில் கொடுத்து ,நான் சாத்தானின் ஊழியன், இது சாத்தான் வேதம் ,இதில் எல்லா கேள்விகளுக்கும் விடையிருக்கிறது  என்று சொல்லாம பார்த்துக்குங்க.... நன்றி.

Semmalar:
Brother
I have read your conversation many times
Really its informative.
I motivated to read Bible more more.
Thank u bro for sharing your bible knowledge here.
I am new to this group

udaya:
@:  Really its informative.

I am very glad.

@:  I motivated to read Bible more more.

Wonderful...Very pleased to hear this. Please keep reading The HOLY BIBLE.

@:  Thank u bro for sharing your bible knowledge here.

You are welcome.

@:  I am new to this group

Welcome to bible2all forum discussion.

Semmalar:
Thank u brother
Can I ask some questions ?
How many times u read bible?
Which bible ru refering
Wat are all the more books available to understand more and more about the bible.

Semmalar:
Thank u brother
May I ask some questions ?
How many times u read the HOLY BIBLE?
Which bible ru refering ?

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version