Author Topic: என்ன செய்து கொண்டிருக்கிறார் ?  (Read 7551 times)

udaya

  • Guest
2000 வருடங்களுக்கு முன் பரலோகம் சென்ற இயேசு கிறிஸ்து தற்சமயம் என்ன செய்து கொண்டிருப்பார் ?

நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்து கொண்டிருப்பார் ?
அல்லது
நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டு இருப்பார் ?
அல்லது
வேறு ஏதாவது செய்து கொண்டிருப்பார் ?

Any idea ?

susan paul

  • Guest
Ya bro he is doing his best for us.... We can't say perfectly.... When we r doing wrong that time  he is interceding for us...  And preparing good place for us....

udaya

  • Guest
நாம் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறாரா ?
அதற்கு காரணம் அவர்தான் என்பது அவருக்கு தெரியுமா ?

susan paul

  • Guest
U r blaming other.....see fight with in us is our way fault....Jesus did not teach us we should fight with each other rather he told us to pray for them....that's all.... But we r giving first important to our brain , angry , etc. Its our mistake .....

arullpm

  • Guest
இப்போதைக்கு மெல்கிசெதேக்கின் முறைப்படியான தலைமை ஆசாரியராகவும் , நமக்காக பரிந்து பேசுகிற மத்தியஸ்தராகவும் இருக்கிறார்.

விரைவில் நம்மை நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியாகவும் நம்மை ஆளுகிர இராஜாவாகவும் இருப்பார்.......

arullpm

  • Guest
விட்டா உங்க பக்கத்து வீட்ல யாரது சண்ட போட்டுகிட்டாலும் அவர்தா காரணம்னு சொல்லுவீங்க போலயே.....

இயேசுவின் நிமித்தம் நாங்கள் துன்ப படுவோம்னு சொல்ரீங்கலா அத நான் ஒப்புக்கொள்கிறேன்.

யார்குடயும் சண்ட போட அவர் எங்களுக்கு சொல்லித்தரலப்பா, அன்பா இருக்கதா சொல்லி தந்துருக்காரு.....

udaya

  • Guest
@:  see fight with in us is our way fault.

நாம் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் " யாருடைய கடவுள் உண்மையான கடவுள் " என்பது தான். இதை ஏன் அவர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார் என்று தெரியவில்லை !

சேனைகளின் கர்த்தர் நம்மீது அக்கறை உள்ளவர் என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் ( 1 இராஜாக்கள் 18  ) தான்தான் உண்மையான கடவுள் என்று நிரூபித்ததைப்ப போல , இப்பொழுதும் நிரூபணம் செய்து ரத்தம் சிந்துதலை தடுத்து நிறுத்தவேண்டும்.

அதை விடுத்து , ...விசுவாசிகளை விட்டு , ஆதாம்- ஏவாள் ,  சிலுவை மரணம் , இரண்டாம் வருகை , அது இது என்று ஏதாவது  சாக்குப்போக்கு சொல்ல வைப்பாரென்றால் ,  " இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் " .......என்ற வாக்கியத்தில் உள்ள " இவ்வளவாய் " ......எவ்வளவாய் என்று தெரிய வரும் .

மனமுண்டானால் மார்க்கம் உண்டு ......

இல்லாமல்போனால்.....
சாக்குப்போக்கு ஏராளம் இருக்கிறது !

udaya

  • Guest
@:    இப்போதைக்கு மெல்கிசெதேக்கின் முறைப்படியான தலைமை ஆசாரியராகவும் , நமக்காக பரிந்து பேசுகிற மத்தியஸ்தராகவும் இருக்கிறார்.

மத்தியஸ்தர் ?

அதாவது , நாம் செய்கிற பிழைகளுக்கு , பிதாவிடத்தில் excuse கேட்டு , பிதா கொடுக்கும் இன்னல்களுக்காக நம்மை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாரா ?

மத்தியஸ்தர் என்றால் அதுதானே நியாயம் ?

@:  விரைவில் நம்மை நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியாகவும் நம்மை ஆளுகிர இராஜாவாகவும் இருப்பார்.......

நம்மை நியாயம் தீர்த்துக்கட்டி , ஒழித்துக்கட்டிவிட்டு....
யாரும் இல்லாத ராஜ்ஜியத்தில் யாருக்காக ராஜாவாக இருக்கப் போறாரோ தெரியல.....

susan paul

  • Guest
Through out fight we can reflect God.... We should reflect in our life.....


susan paul

  • Guest
Sorry to all....I typed with mistake....

Through our fight we can't reflect God....only through our living style we can show it to all...

susan paul

  • Guest
Theemayai nanmayal vellu....

udaya

  • Guest
@:    விட்டா உங்க பக்கத்து வீட்ல யாரது சண்ட போட்டுகிட்டாலும் அவர்தா காரணம்னு சொல்லுவீங்க போலயே.....

இதிலென்ன சந்தேகம் ! பக்கத்து வீட்டுக்காரன் ,.... நாங்க  அல்லேலுயா னு சொன்னா அடிக்க வராம்பா....

@:  இயேசுவின் நிமித்தம் நாங்கள் துன்ப படுவோம்னு சொல்ரீங்கலா அத நான் ஒப்புக்கொள்கிறேன்

ஓ.....'எங்கள் நிமித்தம் அவர் துன்பப்பட்டார்னு' இத்தனை நாளா  சொன்னத மாத்தி சொல்லனும்..? சரி...சொல்லிட்டாப்போச்சு .....

@:    யார்குடயும் சண்ட போட அவர் எங்களுக்கு சொல்லித்தரலப்பா, அன்பா இருக்கதா சொல்லி தந்துருக்காரு.....

ஆனா ....அவர் பிதா வேறமாதிரி சொல்லித் தந்திருக்கிறாரு......

பிதாவும் குமாமரனும் பிரச்சினைகள பேசி தீர்த்துட்டாங்கனா பரவாயில்ல....நம்ம தலை தப்பிக்கும் !

udaya

  • Guest
எலியாவின் கிண்டல் :

எலியாவுக்கும் ஆகாப் ராஜாவுக்குமிடையே நடந்த  " யார் உண்மையான கடவுள் " என்ற பலப்பரீட்சை பற்றி அநேகம் பேர் அறிந்திருக்கக்கூடும் .

பாகால் தெய்வம் , தன்னை உண்மையான கடவுள் என்று நிரூபிக்க தவறியதால் , எலியா தீர்க்கதரிசி , பாகாலை கிண்டல் அடித்ததை யார் மறந்திருக்க முடியும் ?

ஒரு வேளை மறந்திருந்தால்...அவர்களுக்காக  இதோ......

மத்தியானவேளையிலே எலியா அவாகளைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க கூப்பிடுங்கள், அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான், அல்லது அலுவலாயிருப்பான், அல்லது பிரயாணம்போயிருப்பான், அல்லது தூங்கினாலும் தூங்குவான், அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
1 இராஜாக்கள் 18 :27

பரியாசம் பண்ணுவது எலியாவின் உரிமை...அதில் நாம் தலையிட முடியாது.....அது போகட்டும் ..

கேள்வி என்னவென்றால்...

" எலியா  method "  சரிதானா  ? ........இல்லையென்றால்...

இந்த உலகத்தில் உள்ள முப்பது முக்கோடி தேவர்களில் , கடவுள்கள் ....அனைத்திலும் வல்லமை பொருந்திய கடவுளை இனம் கண்டு கொள்ள உதவும் செய்முறை என்ன ?

மேலும்....

எல்லோரிலும் வல்லமை பொருந்திய கடவுள் மற்ற அனைத்துக் கடவுள்களையும் அழித்துவிடக்கூடிய  சாத்தியக்கூறுகள்  என்ன ?

பின்குறிப்பு :

" எல்லோரிலும் வல்லமை பொருந்திய கடவுள் " , என்று நாம் நம்பும் சேனைகளின் கர்த்தர் மற்ற கடவுள்களை  அழிக்க முயற்சி செய்யாமல் , அந்நிய தேவர்களை பின்பற்ற வேண்டாம் என்று பழைய ஏற்பாடு முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கிறாரே .... அது ஏன் ?

அழித்திருந்தால்...
பத்து கற்பனை யின் பிரதான கற்பனைக்கு அவசியமில்லாமல் போயிருக்குமே !


« Last Edit: September 24, 2015, 03:57:47 AM by udaya »

arullpm

  • Guest

@:இந்த உலகத்தில் உள்ள முப்பது முக்கோடி தேவர்களில் , கடவுள்கள் ....அனைத்திலும் வல்லமை பொருந்திய கடவுளை இனம் கண்டு கொள்ள உதவும் செய்முறை என்ன ?

எலியா மாதிரி நீங்களும் போயி வம்புக்கு இழுத்து கேட்டு பாருங்க....


@:எல்லோரிலும் வல்லமை பொருந்திய கடவுள் மற்ற அனைத்துக் கடவுள்களையும் அழித்துவிடக்கூடிய  சாத்தியக்கூறுகள்  என்ன ?

இங்க என்ன நியா நானானு கர்த்தர் போட்டி நடத்திட்டு இருக்கார?

இது அவருக்கு கொடுக்க வேண்டிய மகிமையோட பிரட்சனை

ஒன்னுமே இல்லாத விக்கிரகத்துக்கு  கொடுத்தா அவர் பாத்துடு இருக்கனும், அப்படியா!!!

போட்டி அவருக்கும் விக்கிரகத்துக்கும் இல்லபா...
வெரும் கல்ல அழிச்சி என்ன பலன். அதுக்குட சண்ட போடுறதுக்கு அதுக்கு உயிரும் இல்ல, எது சொன்னாலும் பேசவும் போறது இல்ல.

நீங்க சொல்றமாரியே விக்கிரகத்த அழிக்கிறாருனு வைங்க அதுநால என்ன பலன்?

வணங்க கழுத்து உள்ளவங்க ஒன்னு இல்லனா இன்னொன்னு பொய்டேதா இருப்பாங்க.

அதான் சொல்லவேண்டியவங்கட சொல்லிடே இருக்காரு. காரணம் அவங்களோட இருதைய கடினம்

நீங்க சொல்லுறமாரி அந்த கல்லுக்கு எதும் சக்தி இருந்தாலும் பரவயில்ல ஒருவேல தேவன் அதுக்கு சரிக்கட்ட அத அழிக்கலாம்.

நீங்க சொல்லுரது எப்படி இருக்கு தெரியுமா!

உங்களுக்கு பதில உங்க வீட்ல ஒரு கல்ல நிக்க வச்சி அது பேசுதோ இல்லையோ ஆனா உங்களுக்கு செய்யவேண்டிய எல்லாத்தையும் அதுக்கு செஞ்சி, நீங்க உங்க குடும்பத்துக்கு பன்ன நல்லதெல்லாதையும் அந்த கல்லுதா பன்னுச்சினு உங்க மகிமையெல்லாம் அதுக்கு கொடுத்தா இத நா எங்க வீட்டுகாரங்கட்ட இத கேட்க மாட்டேன் அந்த கல்ல தள்ளி விட்டு அதுக்குட சண்ட போடுவேன்னு சொல்லறமாரி இருக்கு..

உங்க வீட்ல பேசி உணர வைக்காம அதுகூட சண்ட போட்டு பலன் என்ன????

arullpm

  • Guest
இதே மாதரியான சம்பவம் இன்னொறு இடத்தில் நடக்கிறது.
அதற்க்கான காரணமான விக்கிரமும் அழிக்கப்படுகிறது அதற்கு ஜனங்கள் செய்வதை நீங்களே பாருங்கள்.


28 அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின்மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு.
30ஒருவரையோருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள். கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
30 அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா. அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
31 யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலேதானே சாகக்கடவன். அது தேவனால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான். நியாயாதிபதிகள் 6 :28- 31


சம்பவத்தை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு உயிரற்ற கல்லை இடித்ததினால் அவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு கிதியோனை கொல்லவந்தார்கள்.

இப்படிப்பட்வர்களிடத்தில் என்னசெய்வது நீங்கள்தான் சொல்லுங்களேன்...