General Category > Tamil Bible

what is sin

<< < (2/12) > >>

udaya:
@Reply#2:
அவிசுவாசம் பாவம் அல்ல என்பது என் கருத்து .
காண்பதை எல்லாம் , கேள்விபடுவதை எல்லாம் விசுவாசிக்காமல் இருப்பது நல்லது . சிறிதளவு அவிசவாசத்துடன் கூடிய அணுகுமுறை , நம்மை பெரிய ஏமாளியாக்காமல் காக்கும் .

மேலும் , அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய  அவிசுவாசத்தை குறித்து கூறுவதையும் கேட்போம் .
முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.

1 தீமோத்தேயு 1 :13


aruldoss78:
விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள்.
அறியாமையில் இருந்த காலங்களை தேவன் என்னுவதில்லை

udaya:
@ விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள். 

நல்ல விளக்கம் . நன்றி .

kishore kumar:
தேவனுக்கு பிரியமில்லாத எல்லா காரியங்களும் பாவமே....

udaya:
@ தேவனுக்கு பிரியமில்லாத எல்லா காரியங்களும் பாவம்..

தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் எவை?

தேவனுக்கு பிரியமில்லாத , மற்றும்  பிரியமான காரியங்களை கூறுவதில் பரிசுத்த வேதாகமம் முன்னுக்கு பின் முரணான நிலையை கடைப்பிடிக்கிறது.

பத்து கற்பனைகளில் பாதி கற்பனைகள பிதாவும் குமாரனும் மீற சொல்கிறார்கள் . மோசேயின் நியாயபிரமாணம் நவீன காலத்திற்கு ஏற்றதல்ல என்பது எல்லோரும் அறிந்ததே . அது இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு கூட ஏற்றதாக இல்லாததால் அவர் அதில் திருத்தங்களை செய்ய ஆரம்பித்தார் . அப்போஸ்தலனாகிய பவுலின் கருத்துக்களை tips ஆக எடுத்துக்கொள்ளலாமே தவிர அதை வேத வாக்காக கொள்ளமுடியாது . அப்படியானால் , தேவனுக்கு பிரியமில்லாத மற்றும்  பிரியமான காரியங்களை அதாவது பாவம். எது என்பதை  எப்படி கண்டுகொள்வது.

யோவான் 14 :26 இவ்வாறு கூறுகிறது .

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

ஆக , பாவம் எது என்று இனம் காண்பதற்கு பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்தான் வழி போல் தோன்றுகிறது .
சரி....அப்படியானால் பரிசுத்த வேதாகம் ?

It is "an another book "on the self containing some good and valid points.(of course , discarding  bad and irrelevant points ).

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version