My Community

General Category => Tamil Bible => Topic started by: Jasmine on May 04, 2020, 10:00:51 AM

Title: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும
Post by: Jasmine on May 04, 2020, 10:00:51 AM
பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கும் இயேசு என்ற நாமதிற்கும் என்ன உறவு?
இயேசுவுக் பிதாவும் எவ்வாறு ஒன்று என்று விளக்கவும்.

இயேசு தான் பிதா என்று கூறுகிறீர்கள் ஆனால். இயேசு உலகம் உருவான பொழுது எங்கே உள்ளார்?
விளக்கம் தேவை..
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 18, 2020, 02:25:09 AM
ஏசாயா 45:18
ஏசாயா 45:5
ஏசாயா 45:6
ஏசாயா 46:9
ஏசாயா 43:10
ஏசாயா 43:25
ஏசாயா 43:11
ஏசாயா 48:11
ஏசாயா 44:24
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 18, 2020, 10:52:06 AM
ஆமேன்....
சகோ. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரா?
இயேசு கிறிஸ்து நான் தான் பிதா என்று கூறுகிறாரா?
எவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் என்று நாம் கூறுகிறோம்?
அப்படி ஒன்று என்றால் தேவன் உலகத்தை உண்டாகும் பொழுது இயேசு எங்கே உள்ளார்?

வேத ஞானிகள் தயவு கூர்ந்து விளக்கவும்.
மிகவும் தேவையான ஒரு பதிவு, தேவன் வழி நடத்துதலின்படி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்🙏🏻
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 19, 2020, 12:26:44 AM
<சகோ. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரா?>

இல்லை என்றுதான் தோன்றுகிறது ..கீழ்க்கண்ட வசனங்களை கவனியுங்கள்

மாற்கு  13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

யோவான்  5:17 இயேசு அவர்களை நோக்கி என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.

..contd
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 19, 2020, 12:28:48 AM
லூக்கா  2:49 அதற்கு அவர் நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.

சில வசனங்கள் 'இரண்டு பிதாக்கள் இருக்கிறார்களோ ' என்ற ஐயத்தைக்கூட எழுப்புகின்றன.

யோவான்  8:38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.

என் பிதா / உங்கள் பிதா போன்ற சொற்றொடர்களை கவனியுங்கள்
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 19, 2020, 12:29:24 AM
<இயேசு கிறிஸ்து நான் தான் பிதா என்று கூறுகிறாரா?>

அப்படி கூறவில்லை....என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்...என்றுதான் கூறுகிறார்

யோவான் : 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா?
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 19, 2020, 12:29:54 AM
<எவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் என்று நாம் கூறுகிறோம்?>

நோக்கம் , செயல்பாடு , கருத்தொற்றுமை ஆகியவைகளின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறோம்

யோவான் : 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 19, 2020, 12:33:19 AM
<அப்படி ஒன்று என்றால் தேவன் உலகத்தை உண்டாகும் பொழுது இயேசு எங்கே உள்ளார்?>

இயேசு எங்கே இருந்தார் என்று திட்டவட்டமாக தெரியவில்லை. . ஆனால் உலக படைப்பில் அவரது பங்களிப்பு எதுவும் இல்லை என்று வேதம் கூறுகிறது.

ஏசாயா  44:24 உன் மீட்பரும், .................. நான் *ஒருவராய்* வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

ஒருவராய் ...என்ற சொல்லை கவனியுங்கள்.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 19, 2020, 10:40:19 AM
ஆம்!!!
பிதா எப்படியோ அப்படியே பிள்ளையும்.
இயேசு கிறிஸ்து கூறியுள்ளதை ஏன் அவ்வாறு அர்த்தம் கொள்ள கூடாது?

உதாரணமாக: என் குணமும், என் சாயலும் என்னுடைய தாயை போல உள்ளதாக கூறுவார்கள். உன்னை பார்த்தால் உன் தாயை பார்ப்பது போல உள்ளதாக பலர் கூறுவார்கள்.

ஏன் இயேசு கிறிஸ்துவும் அதை அர்த்தம் கொண்டு கூறி இருக்க கூடாது?
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 19, 2020, 10:46:04 AM
தயவு கூர்ந்து சினம் கொள்ள வேண்டாம்.

நான் இயேசு கிறிஸ்துவை குமாரனாக, தேவ ஆட்டுக்குட்டியாக, மீட்ப்பராக, இரட்சகராக, சர்வ வல்லவராக, சர்வ ஞானியாக அறிக்கையிடுகிறோன்.
ஆனால்.. இயேசு கிறிஸ்துவை தேவன் என்றால் ஏதோ ஒரு வகையில் பிதாவை கூறிக்காதது போல் தெரிகிறது.

ஏனெனில் தேவனின் கட்டளைகளுள் ஒன்று, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 19, 2020, 10:48:12 AM

அவ்வாறு இருக்கையில்..
என்னுடைய ஒரே கேள்வி யாரை தேவனாக நான் தொழுது கொள்ள வேண்டும்?
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 20, 2020, 03:47:09 AM
இயேசு கிறிஸ்துவை குமாரனாக, தேவ ஆட்டுக்குட்டியாக, மீட்ப்பராக, இரட்சகராக, சர்வ வல்லவராக, சர்வ ஞானியாக அறிக்கையிடுகிறேன்....என்று சொல்லுகிறீர்கள்...தொடர்ந்து அவரையே தொழுது கொள்ளுங்கள்...
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்......என்பது வேறொரு contextல் சொல்லப்பட்டது.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 20, 2020, 09:45:01 AM
இது உங்கள் கருத்தே தவிர. என் கேள்விக்கு பதில் அல்ல..

உங்களால் வேத ரீதியாக பதிலளிக்க இயலும் என்றால், கணிவோடு விளக்க வேண்டுகிறேன்.

நன்றி..
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 03:56:36 PM
மாற்கு:14:57 மற்றும் 58 வாசியுங்கள் அதன் பின் யோவான்2:19 மற்றும் 20 வாசியுங்கள் உங்களுக்கு புறியும் யார் மெய்யான தேவன் என்று.

இயேசு உயிர்த்து எழுந்த பிறகுதான் அவரின் சீடர்களுக்கே தெரியும் அவர் ஆலயம் என்று சொன்னது அவரின் சரிரத்தை பற்றி என்று பின் ஏன் மாற்கு யூதர்கள் மேல் பொய் சாட்சி சொன்னதாக பலி போடுகிறார்??
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 03:58:34 PM
இயேசு மறித்த பின் தான் எழுதிரிக்கிறார் அப்பொழுது அவருக்கு தெறிய தானே செய்யும் யூதர்கள் பொய் சொல்ல வில்லை என்று பின் எதற்கு யூதர்கள் மேல் இப்படி ஒரு கசப்பான வார்த்தை??இதை மாற்கு எழுதினாரா அல்லது அந்த காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எழுதினார்களா??
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 04:01:05 PM
இயேசு ஒரு நல்ல மனிதர் அவர் நம் பிதாவை பற்றி சொல்ல வந்தவர் நமக்காக மறிக்க வந்தார் அத்துடன் அவர் வேலை முடிந்தது(ஏசாயா:53) ஆனால் ரோமர்கள் யூதர்களை அடக்க வேண்டும் இந்த உலகை ஆல வேண்டும் என்று அவரை கடவுள் ஆக்கி விட்டனர்....

யகோவா(பிதா)ஒருவரே மெய்யான தேவன்✡🙏
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 04:04:14 PM
இயேசு ஒரு நல்ல மனிதர் அவர் நம் பிதாவை பற்றி சொல்ல வந்தவர் நமக்காக மறிக்க வந்தார் அத்துடன் அவர் வேலை முடிந்தது(ஏசாயா:53) ஆனால் ரோமர்கள் யூதர்களை அடக்க வேண்டும் இந்த உலகை ஆல வேண்டும் என்று அவரை கடவுள் ஆக்கி விட்டனர்....
யகோவா(பிதா)ஒருவரே மெய்யான தேவன்✡🙏
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 04:31:40 PM
அப்பொஸ்தலர்:14:வசனம் 6 முதல் 19 வரை வாசியுங்கள் யார் கடவுள் என்று தெரியும்....பவுல் யாரை கடவுள் என்று சொன்னார்...யாரிடம் சொன்னார்.....யார் மேல் கசப்பை விதைத்து எழுதப்பட்டது என்று...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 04:35:11 PM
கீரிக்கர்கள் மற்றும் ரோமாரியர் இடத்தில் அவர் பிரசங்கம் பன்னுகிறார் ஆதலால் தான் அவர்கள் அவரை சுபீட்டர் மெர்குரீ என்று சொன்னார்கள்.......காரணம் அவர்கள் பல கடவுளை வணங்கி வந்தார்கள் அவர்களின் கடவுளின் பெயர் தான் அது.....ஆங்கிலத்தில் Zeus என்று சொல்ல படும்.அந்த கடவுளின் பெயரை பவுலுக்கு வைத்தார்கள்.....அங்கு யூதர்கள் இல்லை புரிந்து கொள்ளவும்.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 04:37:05 PM
பவுல் ஒரு ரோமாரியர் யூதர் ஆகிய இயேசுவின் வார்த்தையை கேட்டு பிதாவை வணங்கியவர்.......ஆகவே இவரும் அந்த மக்களுக்கு உண்மையை சொல்கிறார் வானத்தையூம் பூமியும் படைத்தவர் தான் உண்மையான கடவுள் என்று.....ஏன் அவர் இயேசு தான் உண்மையான கடவுள் என்று கூற வில்லை??
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 20, 2020, 04:39:14 PM
இப்படி கூறியதால் அதில் இருந்த ரோமர்கள் மற்றும் கீரிக்கர்கள் அவர்கள் மேல் கல்லேறிந்தனர்......அந்த காலகட்டத்தில் பேருந்து கிடையாது கைபேசி கிடையாது அப்படி இருக்க அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் எப்படி வந்தார்கள்??ஆகவே யூதர்கள் மீதான கசப்பை பரப்ப பட்டிருக்கிறது......அவர் மேல் கல் எறிந்தது ரோமர்கள் மற்றும் கீரிக்கர்கள் தான் அவர் பிரசங்கம் செய்தது பிதாவை பற்றி தான்✡.🙏
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 20, 2020, 11:55:57 PM
Reply to # 12

வேத ரீதியாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன் -

ஏசாயா : 45:5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.

ஏசாயா : 45:18 வானங்களைச் சிருஷ்டித்து.............. தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

contd.....

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 20, 2020, 11:56:26 PM
ஏசாயா : 45:6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று.........நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்,
நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

The above verses STRONGLY indicate "HE" is the ONLY ONE GOD (not JESUS even if he is the son of god )

contd.....
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 20, 2020, 11:57:35 PM
ஏசாயா : 46:9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்,
நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை.

The above verse indicates nobody is equal to HIM ( JESUS for that matter )

contd....
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 20, 2020, 11:58:01 PM
ஏசாயா : 43:10 நானே அவரென்று.....................கர்த்தர் சொல்லுகிறார்,
எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

GOD clearly said there shall be no GOD after HIM ( pointing JESUS )

இது ஒருபுறம் இருக்க , எனக்குமுன் -  எனக்குப்பின்...என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கும் போது , கடவுள் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்ற கூற்று தவறு என்று தெரிகிறது

contd.....
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 20, 2020, 11:59:06 PM
ஏசாயா : 43:11 நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

GOD strongly says , HE is the only SAVIOUR (again, disqualifies JESUS as the saviour )

ஏசாயா : 48:11 என்னிமித்தம்.......................குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

GOD would never give his GLORY to any other person ( including his son )

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 21, 2020, 12:00:19 AM
contd.....
வேத ரீதியாக பார்க்க முற்பட்டால் விசுவாச குறைவு ஏற்படும்...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 21, 2020, 12:21:01 AM

Reply to #17 - #20

அப்போஸ்தலனாகிய பவுல் கூறியதைக் காட்டிலும் , தேவனாகிய கர்த்தர் தாமே சொன்னதாக வேதம் கூறுவதை  reply #21 - #25 கூறியிருக்கிறேன்.
அதற்கு முன்னுரிமை அளிக்கலாம் எனபதென் கருத்து.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 21, 2020, 11:58:56 AM
@udaya
I heartily appreciate your effort and involvement, also you are spending your time on explaining biblically. Thank you!!! 

விசுவாசம் குறைப்பாடு ஏற்படவில்லை சகோ..
ஆனால்.....
ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறுகிறோம் என்று கேள்வி எழுப்புகிறது.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 21, 2020, 12:01:44 PM
ஏனெனில் இந்த வேத பகுதியில் யோவான் 12:44-50 இயேசு தாமே கூறியுள்ளதாக தெளிவாக கூறிக்கிறது.  இயேசு கிறிஸ்துவும் பிதாவும் வேறு என்று நாம் புரிந்து கொள்ள இயலுகிறது. 

அப்படியிருக்க, ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று தொழுது கொள்ளுகிறோம்??

Now whom we have to worship
"THE FATHER" or  "JESUS CHRIST"!!
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 21, 2020, 12:21:12 PM
@Kalvin
தங்களின் வேத ரீதியான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேற்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள்.

நன்றி!!
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:27:11 AM
Reply to #28

<விசுவாசம் குறைப்பாடு ஏற்படவில்லை சகோ..>

மிக்க மகிழ்ச்சி

<ஆனால்..... ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறுகிறோம் என்று கேள்வி எழுப்புகிறது.>

இது அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கொண்டபுதிய ஏற்பாடடு அரசியல்-
இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு பிறகு , இயேசுவை பின்பற்றிய மக்களை வழிநடத்தி சென்றதில் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
contd....
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:28:05 AM
இயேசுவை பின்பற்றிய மக்களில் ,  ரோமர் , கிரேக்கர் மற்றும் பல இனத்தவர்கள் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து , தங்களுடைய ஆயுட்காலத்திலேயே திரும்பி
வருவார் என்று நம்பினார்கள்...ஆனால் வருகை தாமதமாவது கண்டு , முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் . சிலர் தங்களுடைய பழைய மார்க்கத்துக்கே
திரும்பி செல்ல எத்தனித்தார்கள் . இது பவுலுக்கு மிகப்பெரிய தலைவலியாகிவிட்டது .
contd...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:28:35 AM
எல்லாவற்றையும் சரிக்கட்ட பவுல் எடுத்த நிலைப்பாடுதான்
" இயேசு கிறிஸ்து - தேவன் "...இது கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை சித்தாந்தம்
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:30:24 AM
Reply to #29

<<Now whom we have to worship "THE FATHER" or "JESUS CHRIST"!!>>

மேற்கண்ட தடுமாற்றம் பலருக்கும் உள்ளது . இதற்கு காரணம் இயேசு கிறிஸ்து பேசிய பல கருத்துக்கள் .
contd...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:30:45 AM
முதலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள  யோவான் 12:44-50 ல் 49 , 50 வது வசனம்..
49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன், ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

சரி....கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்..
contd....
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:31:44 AM
யோவான் : 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், ....
                        V/s
லூக்கா : 12:51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ?
சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:32:15 AM
லூக்கா : 18:19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.( அதிர்ச்சி )
contd...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:32:37 AM
யோவான் : 18:20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்,
ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்,
அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
                        V/s
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:32:55 AM
மாற்கு : 4:34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை, அவர் தம்முடைய சீஷரோடே
தனித்திருக்கும் போது,அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
contd....
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:33:14 AM
யோவான் : 8:14 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது....
                        v/s
யோவான் : 5:31 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.

இன்னும் பல.......
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: udaya on May 22, 2020, 02:33:33 AM
ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்".....என்ற வசனத்தின்படி......மேற்கண்ட வார்த்தைகள் பிதாவினுடையதா ?

எனவே FATHER or SON என்ற தடுமாற்றம் வருவது இயற்கைதானே !
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 22, 2020, 04:43:21 AM
கிறிஸ்தவர்களே மத்தேயு:6 :வசனம் 1 முதல் 14 வரை வாசியுங்கள்....இயேசுவே தெளிவாக கூறியுள்ளார் யாரை வணங்க வேண்டும் மற்றும் எவ்வாறு வணங்க வேண்டும் என்று......ஆதாலல் இயேசு ஒரு நல்ல மனிதர் அவரை உயர்த்துவதாக நினைத்து பிதாவை அசட்டை பன்னாதே.......காரணம்...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 22, 2020, 04:50:24 AM
நம் வாகனம்,நம் வீட்டு கதவு இப்படி அனைத்து இடத்திலும் ஒரு வசனம் பார்க்க முடியும்.......கர்த்தரே மெய்யான தேவன் என்று ஆனால் இப்பொழுது  "இயேசுவே" மெய்யான தேவன் என்று இருக்கிறது இதை பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருக்கிறது அப்படி என்றால் நம் பிதாவுக்கு எப்படி இருக்கும் அவர் குமாரனுக்கு எப்படி இருக்கும் சிந்தித்து பாருங்கள்...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Kalvin on May 22, 2020, 04:58:28 AM
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யாத்திராகமம் 20:7
ஆதலால் என் கருத்தை முடித்து கொள்கிறேன்......கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் சமாதானம் ஏதேனும்
தவராக கூறியிருந்தார் மண்ணிக்கவும் ✡🙏

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on May 22, 2020, 05:17:43 AM
#33
அப்படி இருக்க நாம் ஒரு சராசரி மனிதனின் வழிகாட்டுதலின் பெயரில் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறி தொழுது கொண்டு இருக்கிறோமா??

இது சரியா??

இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற மட்டுமே உலகத்திற்கு வந்ததாக கூறுகின்றார்.

ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறுகிறோம்..
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Gladson on May 29, 2020, 11:49:32 PM
Sister,
Read john 3:16 ur first doubt for relationship.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Gladson on May 29, 2020, 11:52:51 PM
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1

2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2

3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3

Ur second doubt where he was at origin
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Gladson on May 29, 2020, 11:57:50 PM
7 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
1 யோவான் 5:7

Ur last doubt
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on June 04, 2020, 09:38:31 AM
Amen...
Yes Bro!! What you said was very clear.
Even in Matthew 3:16,17 those verses clearly encounters that Jesus Christ is the son of the lord the almighty..
I testifies with that verses
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on June 04, 2020, 09:52:25 AM
But I request you to go through #29
That is my doubt, I personally believe jesus Christ is the saviour, he is the only way to reach out God or can also say Heaven too.
So in that case Jesus Christ is the son of God but not God.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on June 04, 2020, 09:56:13 AM
In many Bible verses Jesus Christ is encountered that God is different from him. If you go through all the chat about this conversation you can find out.
My doubt is #29 if you can explain biblically kindly do so.. Thank you..
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Hashim on June 05, 2020, 11:27:43 PM
Jesus pbuh is not God . He is the messenger of god.. Avar yendha idathilum thannai vanagumaaru kooravillai.. Kadavul oruvaney.. Kadavukuku uruvam kidayaadhu..Andha kadavulai mattum dhan vananga venum..
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Saravana kumar on June 07, 2020, 08:59:14 AM
https://m.youtube.com/watch?v=XbtbCHtHPnI
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Hashim on June 07, 2020, 09:26:41 AM
Bro.. God is 1.. Not 3 in 1.. Please try to understand.. Indha madhri church oda teachings ah kanna moodikittu nambaadheenga bro. Kanna thorandhu learn pannunga. We have to follow jesus, not the church..I hope you understand. Peace be upon you..
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: &#2990;&#3008;&#2985;&#3006; on June 09, 2020, 03:23:19 PM
8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
எபிரேயர் 1:8

9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர். ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்.
எபிரேயர் 1:9

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Meena on June 09, 2020, 03:25:26 PM
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1

Title: பிதா - ஒருவராய் சாவாமை உள்ளவர்
Post by: Dayanithi on June 24, 2020, 08:46:56 PM
1 திமொத்தேயு : 6 -16 பிதா ஒருவராய் saavaamai உள்ளவர் they can't die
But  கிறிஸ்து மரிக்கு படி வந்தவர் தேவ குமாரன்

தேவனை ஒருவனும் கண்டதில்லை
கானக்கூடாதவர் என வேதம் கூறுகிறது

கிறிஸ்துவை ஆப்ரஹாம் கண்டுள்ளார் என கிறித்து கூறுகிறார்
யோவான் : 8 -56
இன்னும் அநேக ரகசியங்கள் வேதத்தில் உள்ளது
For any other contact : 7092032772
                                          8754553532
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Daya on June 24, 2020, 08:57:42 PM
U r right sister
என் பிதா என்னிலும் பெரியவர் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்
என் பிதாவை மட்டும் தொழுது கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார் 
யோவான் 4:21,22,23
1திமோ 6-16
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jayasingh on June 25, 2020, 08:13:51 PM
1 தீமோத்தேயு  3

16: அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. *தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்*, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jayasingh on June 25, 2020, 08:18:42 PM
ஏசாயா  9
6: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, *வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா*, சமாதானப்பிரபு என்னப்படும்.

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jayasingh on June 25, 2020, 08:31:37 PM
மல்கியா  3

6: *நான் கர்த்தர், நான் மாறாதவர்*; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
For I am the LORD, I change not; therefore ye sons of Jacob are not consumed. (KJV)

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jayasingh on June 25, 2020, 08:33:38 PM
ஏசாயா  42

8: *நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்*.
I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images. (KJV)

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on June 28, 2020, 10:37:22 AM
@Jayasingh
ஆமேன்..
வசனங்கள் கூறுவது உன்மை‌.
நீங்கள் மேல் கண்ட என் சந்தேகங்களை பார்த்து இருப்பீர்கள் ஆனால்.
இந்த வசனங்களை இயேசு கிறிஸ்து தாமாகவே கூறியவையா?
ஒருவேளை இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் என்று நீங்கள் கருதினால்,
கனிவான விளக்க வேண்டுகிறேன்.. 
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasmine on June 28, 2020, 10:45:33 AM
என் மனதை குழம்பு ஒரேயொரு கேள்வி.
ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறுகிறோம்.
நான் வேத ரீதியாக விளக்கத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் இன்று வரை பதில் கிடைக்கவில்லை.
உங்களின் எவரேனும் வளக்க வளக்க இயலும் என்றால் கணிவோடு விளக்க வேண்டுகிறேன்..
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jayasingh on June 30, 2020, 02:07:33 AM
Praise the Lord Sister. Please watch this video ஏன் நாம் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று கூறுகிறோம்
https://youtu.be/a-GLmr55n4Q
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: C. Victor on July 04, 2020, 06:04:41 AM
இயேசுவே பிதா, இதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Jasa v on July 07, 2020, 07:10:48 AM
https://youtu.be/kTQlqNraMzQ
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Wilson prabu on July 07, 2020, 07:14:34 PM
The lord of god is enlightenment... jesus christ is the shadow  of the lord.
Old testament  explained about the god.
New testament  states about the shadow and the guides of god like jesus christ.
The wall and the art is lord of god.
Only the colour  is jesus christ.

There is the opinion,  would you like the colours  or the
Art.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Robert dinesh on July 12, 2020, 01:35:22 PM
இயேசு சொன்னதற்கும் அவர்கள் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது சகோதரா, ஆராய்ந்து பாருங்கள் நீங்கள் கொடுத்துள்ள வசனங்களை...
இயேசு சொன்னதை திரித்து சொல்கிறார்கள் அல்லவா அதுதான் பொய் சாட்சி.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Robert dinesh on July 12, 2020, 01:46:44 PM
Jesmin.

இயேசுவைக்குறித்து கூறும்போது மகா தேவன் என்ற பதம் கூறப்பட்டுள்ளதை வாசியுங்கள்
13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

தீத்து 2

Shared from Tamil Bible
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Adlin on July 19, 2020, 05:34:08 PM
ஆம் இருவரும் ஒன்று தான்..
யோவன் 14 - 7 முதல் 10 வரை படுயுங்கள். இயேசு நேரிடையாகவே பேசினார் தான் தாம் பிதா என...
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Alvins on July 25, 2020, 04:18:51 PM
For post 5 by udaya

இயேசு கிறிஸ்து, தம்மை பிதா என்று சொல்லவில்லை.

ஏசாயா 6:9 ல் சொல்லப்பட்ட " நித்திய பிதா " யார்?
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Praveen1212 on August 04, 2020, 09:41:41 AM
பிதாவும் இயேசுவும் வேறுவேறு நபர்கள்தான்
ஆனால் (தேவன்) ‌‌என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை‌ குறிக்கும்
இதற்கு ஆதாரமாக

ஆதி 1:26 ஜ வாசியுங்கள்
        பின்பு தேவன்:நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுக்ஷனை உண்டாகுவோமாக

இதில் நமது என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை‌ குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Praveen1212 on August 04, 2020, 10:05:12 AM
ஆதியில் பிதா இருந்தபொழுதே இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் இருந்தாக வேதத்தில் ஒரு சில வசனங்களில் காண்கிறோம்

யோவான் 1:1-14. ஆகிய வசனங்களில் இயேசு கிறிஸ்துவை குறித்து கான்கிறோம்.

ஆதி 1:2  தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்
          இதில் ஆவியானவரும்‌ இருந்ததாக காண்கிறோம்

Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Praveen1212 on August 05, 2020, 08:11:12 AM
(தேவன்) என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை குறிக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாற்றையும் கொடுக்கிறேன்.

ஆதி 11:7
            நாம் இறங்கிபோய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஹையைத் தாறுமாறாக்குவோம் என்றார்

இந்த வசனத்தை சற்று கவனித்து பாருங்கள். இதில் "நாம்" என்று யாரை எல்லாம் குறித்து கூறப்பட்டுள்ளது?

பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை குறித்தே அன்றி வேறல்ல
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Pranesh on August 09, 2020, 05:39:54 PM
யோவான் 3.13 & யோவான் 8:56 &ஆதி, 18:1
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Nivedha on August 09, 2020, 10:13:06 PM
Praise the Lord

உலகம் உண்டான போது இயேசு கிறிஸ்து இருந்தார். நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் வேதத்திலேயே உள்ளது.

தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
(ஆதியாகமம் 1:3 )
அவர் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்

Don't study single language do all the translation to know our doubt
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Nivedha on August 09, 2020, 10:27:26 PM
நமது தேவன் திரித்துவ தேவன்
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Salo on October 03, 2020, 09:19:13 PM
கொஞ்சம் விரிவாக இருக்கு. Whatsapp no சொன்னால் அனுப்புகிறேன்
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Sanjeevikumar on November 02, 2020, 09:27:40 AM
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்.
பிதாவாகிய தேவன் வேறு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேறு.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: &#2984;&#3014;&#2994;&#3021;&#2970;&#2985;&#3021; on November 10, 2020, 07:09:51 AM
வேதம் முழுவதும் இயேசு கிறிஸ்து மட்டுமே.
பழைய ஏற்பாடு கிறிஸ்து வருவதை அறிவிக்கிறது. புதிய ஏற்பாடு வந்ததையும் வரப்போவதையும் அறிவிக்கிறது.
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Karthikeyan on December 21, 2020, 12:49:59 AM
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14 :9
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Karthikeyan on December 21, 2020, 12:52:36 AM
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14 :11
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: Robert on January 27, 2021, 11:31:26 AM
இயேசு கிறிஸ்துவின் தந்தை பிதா
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: SAM KITTY on February 17, 2021, 07:07:23 AM
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
பிலிப்பியர் 2:6

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2:7

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8
Title: Re: பிதா, தேவன், பரம பிதா, யேஹோவா, இந்த நமதிற்கு
Post by: T.JOSHUA immanuel on February 20, 2021, 09:15:27 AM
மத்தேயு 3:17லை வசியுங்கள்

மத்தேயு 3:17  (அன்றியும் ,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி:இவர் என்னுடைய நேசகுமாரன் , இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது)

ஆகையால் இயேசுவும் , பிதாவும் ஒருவர் இல்லை என்று இந்த வசனத்தில் தெளிவாக அறியலாம்.