My Community

General Category => Tamil Bible => Topic started by: James Ruban on November 17, 2018, 11:02:30 PM

Title: Doubts about the Curse of the God to serphanat
Post by: James Ruban on November 17, 2018, 11:02:30 PM
ஏதேன் தோட்டத்தில் கர்த்தர் சர்பத்தை சபித்தது சரியா?  ஏனென்றால் சாத்தான் தானே சர்பத்தின் உருவில் மாறினான் என்று வேதத்தில் இருக்கிறது,  சர்பம் சாத்தான் தன் உருவில் மாற சம்மதித்ததாக எழுதப்படவில்லையே அப்படியிருக்க தேவன் பாம்பை சபிக்க காரணம் என்ன?
Title: Re: Doubts about the Curse of the God to serphanat
Post by: James Ruban on November 18, 2018, 06:34:11 AM
நான் சரியா என்று கேட்டது தவறுதான் சகோ தேவன் செயலை விமர்சிக்க நான் யார் கேட்டது காரணம் உதாரணத்திற்கு. நீங்கள் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்த ஒரு பாம்பு என்று வைத்துகொள்ளுங்கள் சாத்தான் உங்கள் உருவில் மாறி வஞ்சிக்க போகிறான் ஆனால் உங்கள் உருவில் மாற உங்களிடம் அவன் அனுமதி கேட்கவில்லை அவனே முடிவு செய்து கொள்கிறான் உங்கள் உருவில் மாறி அவன் தவறு செய்தான் என்று உங்களுக்கு தெரியாது அப்படியிருக்க தேவன் உங்களை சபிப்பாரா அப்படி பாம்பு ஒத்துகொண்டது என்றால் அது ஏன் வேதத்தில் எழுதவில்லை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சாத்தான் பாம்பிடம் பேசி சம்மதம் வாங்கிஇருக்குமோ அப்படி இருக்க பாம்பை சபிக்க காரணம் இப்பொழுதும் நான் தேவனுடைய முடிவை நான் விமர்ச்சிக்கவில்லை அதற்கு காரணம் மட்டும் தான் கேட்கிறேன் நான் தவறாக பேசி இருந்தால் உங்களிடமும் கர்த்தரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நன்றி!
Title: Re: Doubts about the Curse of the God to serphanat
Post by: udaya on November 18, 2018, 07:46:57 AM
சரியா என்று  விசுவாசிகளின் குரலாகத்தான் அதை  பதிவு செய்தேன் . கடந்த காலங்களில் நானும் இதுபோன்ற பல கேள்விகளை கேட்டு இருக்கிறேன் அப்போதெல்லாம் விசுவாசிகள் இந்த மாதிரியான ஒரு பதில் கருத்தை கூறுவார்கள் அதைத்தான் உங்களுக்கு நினைவு படுத்தினேன். மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை.

அப்படியே இருந்தாலும் கூட நீங்கள் அந்தக் கேள்வியை தேவனாகிய கர்த்தரிடத்தில் கேட்கவில்லையே . கருத்துக்களத்தில் தானே கேட்டீர்கள்! அதில் எந்தத் தவறும் கிடையாது.
மன்னிப்பு கேட்கிற அளவிற்கு ரொம்ப சீரியஸா போயிட்டீங்களே சகோ.
Take it easy bro.....

அது இருக்கட்டும்...

அடிப்படையில் நான் கேட்க வந்த கேள்வி என்னவென்றால் , சாத்தான் எப்பொழுது சர்ப்பமானது அல்லது சர்ப்பமாக முயற்சித்தது என்பதுதான்.
எந்த வேதப்பகுதி அந்த மாதிரியான ஒரு கருத்தை தோற்றுவிக்கிறது என்று கூற முடியுமா ?
Title: Re: Doubts about the Curse of the God to serphanat
Post by: udaya on November 18, 2018, 08:03:17 AM
சகோ
கேள்வி எதுவாகிலும் அதைக் கேட்பதில் எந்த தவறும் இல்லை .
என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று இயேசு கிறிஸ்துவே பிதாவை நோக்கி கேட்கவில்லையா?
Cheer up....
Title: Re: Doubts about the Curse of the God to serphanat
Post by: udaya on November 24, 2018, 04:36:57 AM
ஆமாம்.......சர்ப்பத்தை சர்ப்பம் என்றும் , சாத்தானை சாத்தான் என்றும் வைத்துக்கொள்வதில் என்ன சங்கடம் ?