My Community

General Category => Tamil Bible => Topic started by: James Ruban on November 02, 2018, 08:34:34 PM

Title: Doubt regarding 1000 years rule
Post by: James Ruban on November 02, 2018, 08:34:34 PM
What do you think about the 1000 years rule.  Is it going to happen before second coming of Jesus or is it going to happen after the second coming.

Title: Re: Doubt regarding 1000 years rule
Post by: Vickyalpha on November 03, 2018, 06:32:19 AM
@udaya brother

கடவுள் வருடங்களை சொல்லும்போது எப்போதுமே 1000வருடம்=1 நாள் கணக்கில் சொல்வதில்லை. அவர் சாதாரண மனித வருடங்களையும் குறிப்பிட்டதாய் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா..
மேலும் சிலர் யேசு உயிர்தெழுந்தவுடன் 1000 வருட அரசாட்சி தொடங்கி விட்டது எனவும், இப்போது அது முடிந்து நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் புத்தகத்தில் 1914ம் வருடம் பரலோகத்தில் யேசு அரசனாக முடிசூட்டிக்கொண்டதாக சொல்கிறார்கள்.
Title: Re: Doubt regarding 1000 years rule
Post by: udaya on November 03, 2018, 07:14:22 AM

@: Bro. Vickyalpha

இப்படி ஆளாளுக்கு ஒன்று சொல்லிக் கொண்டிருந்தார்களேயானால் கடவுளுடைய திட்டத்துக்கு ஊறு விளையும் என்பது கடவுள் அறியாதது அல்ல.
இருந்தும் அவர் இதையெல்லாம் தடுத்து நிறுத்தாமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. கடவுளுடைய ஊழியர்கள்தான் கடவுளுடைய திட்டங்களுக்கு  முதல் இடையூறு .
நமது அறிவுக்கு இவையெல்லாம் எட்டாது என்றும் , கடவுள் ஒரு காரணத்தின் நிமித்தம் தான் இவைகளை அனுமதிக்கிறார் என்ற கூற்றெல்லாம் சில சமயங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இந்த சமயத்தில் Epicurus சொன்ன கருத்து ஏன் நினைவுக்கு வருகிறது என்று தெரியவில்லை !

Is God willing to prevent evil, but not able? Then he is not omnipotent.
Is he able, but not willing? Then he is malevolent.
Is he both able and willing? Then whence cometh evil?
Is he neither able nor willing? Then why call him God?
Title: Re: Doubt regarding 1000 years rule
Post by: Vickyalpha on November 03, 2018, 07:50:43 AM
@udaya brother
ஒருவேளை இப்படி இருக்கலாம் அல்லவா? கடவுள் மிகவும் அன்பு நிறைந்தவர்.
சாத்தான் அவரை எதிர்த்தாலும், அவர் அவனை நேசித்தார். சாத்தான் கடவுளை எதிர்த்து, அவரது நடைமுறைகள் தவறு என்ற பொழுது கடவுள் அவனை அழித்திருக்க முடியும். ஆனால் கடவுள் அப்படி செய்யவில்லை.
இப்படி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு சிறந்த கணித ஆசிரியர் ஒரு கடினமான பாடத்தை நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு சேட்டைக்கார மாணவன் எழுந்து அவர் சொல்லிக்கொடுப்பது தவறு என்று அவரை குற்றம் சாட்டி, கூச்சல் போட்டான். அவனுடன் சில நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். இப்பொழுது அவர் என்ன செய்யலாம்? அவர் அந்த மாணவனை வகுப்பறையை விட்டு வெளியேற்றலாம், அவருக்கு அந்த அதிகாரம் உண்டு. ஆனால் அப்படி செய்தால் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்கள்? ஒருவேளை அந்த பையன் சொன்னது சரியாயிருக்குமோ என்று நினைப்பார்கள்.
புத்திசாலியான அந்த ஆசிரியர் என்ன செய்வார்? அந்த மாணவனின் கையில் சாக்பீஸை கொடுத்து, அவனை முன்னால் வரசொல்லி அவனை அந்த பாடத்தை நடத்த சொல்லுவார். அப்பொழுதுதான் அந்த பையன் சொன்னது தவறு என்று மற்றவர்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியும். அந்த பையனுக்கும் அதை புரியவைக்க முடியும்.
கிட்டத்தட்ட அந்த கணத்தில் ஒரு ஆசிரியரின் அதிகாரத்தை பையனுக்கு கொடுக்கிறார்.
அதைப்போலவே சாத்தான் கடவுளுக்கு எதிராக புரட்சி செய்த போதும் நடந்தது.
அவர் அவனுக்கு அதிகாரம் கொடுத்து பூமியில் அவனை அனுமதித்தார்.
மனிதர்கள் சுகபோகமாக, சுதந்திரமாக, வலிமையானவன் பிழைக்கலாம் என்ற வாழ்வின் கோட்பாட்டை(சாத்தானின் கோட்பாடு) தேர்வு செய்கிறார்களா?
அல்லது கடவுளின் வரம்புக்குள் அடங்கி, அவரை முழுவதும் நம்பி , ஒருவருக்கொருவர் உதவிசெய்து, சார்ந்து வாழும் கோட்பாட்டை(கடவுளின் விருப்பம்) தேர்வு செய்கின்றனரா? என்று அவர் மற்ற தூதர்கள்(மாணவர்கள்) முன்பாக காட்ட விரும்புகிறார். எனவே அவர் சாத்தானை அனுமதித்திருக்கிறார்.
இப்படியும் வைத்துக்கொள்ளலாமே brother.


Title: Re: Doubt regarding 1000 years rule
Post by: udaya on November 03, 2018, 09:30:37 AM

@:Bro.Vickyalpha
ஒரு நல்ல பொருத்தமான உதாரணத்தைச் சொன்னீர்கள் .மகிழ்ச்சி.
ஆனால்......
கடவுள் .....அவர் கடவுள்.
அவர் யாருக்கும் எதையும் நிரூபிக்க அவசியமில்லையே சகோ.
எல்லாம் அவருக்கு கீழே தானே.
ஒருவேளை அவர் யாருக்காவது எதையாவது நிரூபிக்கவோ அல்லது முன்னிலைப்படுத்தவோ எடுத்துக்காட்டவோ  விருப்பப்படுவாரானால் அந்த யாருக்கோ என்பது மனிதனாகத்தான் இருக்க முடியும்.
வேறு யாரையும் விடவும் மனிதனுக்கு முக்கியத்துவம் முதன்மைத்துவம் கொடுப்பது போன்ற ஒரு கருத்து வேதத்தை படிக்கும் போது பல இடங்களில் ஏற்படுகிறது.
Title: Re: Doubt regarding 1000 years rule
Post by: udaya on November 16, 2018, 06:35:07 AM
@Vickyalpha

ரோமர் 10 : 17ல் காணப்படுகிற " கேள்வி " என்கிற பதம் question என்ற பொருளில் பயன்படுத்தப் படவில்லை என்று தோன்றுகிறது.

" கேள்விப்படுதல் "  hear about என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கருதுகிறேன்

இதே மாதிரியான ஒரு பிழையான quote ஐ கடந்த காலங்களில் நானும் செய்திருக்கிறேன்.

தயவு செய்து அந்தப் பகுதியை மீண்டும் படித்து பார்த்து உங்களுடைய கருத்தை தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி.