Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Stephen selvam
« on: October 22, 2018, 04:31:42 PM »

Mannikkavum...

Ennudaya padhil reply # 14 Ku send pannadhu... Reply # tharama poitan....
Posted by: Vickyalpha
« on: October 22, 2018, 11:18:11 AM »

படித்தும் புரியவில்லை என்றுதான் உங்களிடம் கேட்கிறேன்.
கொஞ்சம் விளக்கி கூற முடியுமா உங்களால்?
Posted by: Stephen selvam
« on: October 22, 2018, 10:56:30 AM »

Neengal padithal puriyum endru ninaikkiren...
Posted by: Vickyalpha
« on: October 22, 2018, 09:40:39 AM »

இதற்கும் roman 9 ம் அதிகாரத்திற்கும் என்ன சம்பந்தம் brother? கொஞ்சம் விளக்கி கூற முடியுமா?
Posted by: Stephen selvam
« on: October 22, 2018, 08:43:15 AM »

Romans 9 th chapter may help you all I think..

It's no a direct answer but can help a little bit to understand the lord's work.
Posted by: udaya
« on: October 22, 2018, 08:01:16 AM »

@:ஒரே ஒரு வேதபுத்தகத்தை வைத்து கிட்டத்தட்ட 1700 வருடங்களாய், பல லட்சக்கணக்கான bible scholors, பிரசங்கிமார்கள், ஒவ்வொரு நூற்றாண்டின், ஒவ்வொரு நாளும், ஒரே வசனத்துக்கு புதிய புதிய அர்த்தங்களை எடுத்து இப்போது வரை பிரசிங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே புத்தகம் தான், அதே வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிச்சம். இன்றும் முடிவில்லாமல் தொடர்கிறது.

Brother ...... இதுதான் கிறிஸ்தவத்தின் உண்மையான பிரச்சனை ..... இப்படி ஆளாளுக்கு தனக்கு தோன்றியதையெல்லாம் சொல்லி , அதுதான் சரியென்று மற்றவர்களை நம்ப வைக்க முயற்சி செய்வதால்தான் நமக்குள் பல பிரிவுகள் , மறறும் உட்பூசல் ஏற்படுகிறது ......... நமக்கு சாத்தான் தேவையில்லை ! ! !

அன்றே , லுாக்கா ஆசிரியருக்கும் இதே சூழ்நிலைதான் ஏற்பட்டிருக்கிறது ......... லூக்கா - 1 ;1 - 4 வசனங்களைப் படித்தால் இது விளங்கும் .

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததாக குறிப்பிடுகிறார் ........ பகுத்தறிவு .
Posted by: Vickyalpha
« on: October 22, 2018, 07:32:26 AM »

அப்படியும் இருக்கலாம் brother. அல்லது நான் சொன்னபடியும் இருக்கலாம். தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எல்லாம் ஒவ்வொரு யூகங்கள் தான்.
ஒரே ஒரு வேதபுத்தகத்தை வைத்து கிட்டத்தட்ட 1700 வருடங்களாய், பல லட்சக்கணக்கான bible scholors, பிரசங்கிமார்கள், ஒவ்வொரு நூற்றாண்டின், ஒவ்வொரு நாளும், ஒரே வசனத்துக்கு புதிய புதிய அர்த்தங்களை எடுத்து இப்போது வரை பிரசிங்கித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே புத்தகம் தான், அதே வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிச்சம். இன்றும் முடிவில்லாமல் தொடர்கிறது.
அதே போல் உங்களுக்கு ஒரு கண்ணோட்டம், எனக்கு ஒரு கண்ணோட்டம்.
எது சரியோ, அது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
Posted by: udaya
« on: October 22, 2018, 06:25:56 AM »

@:Reply#28

சர்ப்பம் சாத்தானா ? அல்லது சர்ப்பத்திற்குள் சாத்தானா ? உங்கள் கருத்து என்ன ?

@:Reply#29

@:ஆதாம் ஏவாளுக்கு பிறகு ஏதேனுக்கு எந்த மனிதரும் வந்து ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது என்றுதான் கடவுள் கெருப்பீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் பாதுகாவலாக வைத்தார்

அதைத்தான் எசேக்கியல் - 28:14  ல் ..நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப் ......என்று கூறுகிறார்.
மனிதன் எப்படி கேருப் ஆக இருக்கமுடியும் , என்று ஐயப்பட்டால், அது எசேக்கியல் - 28:14 எப்படி உண்மையாக இருககமுடியும் என்று கேட்பதற்கு சமம்.
இதுதான் "பகுத்தறிந்து ஏற்றுக் கொள்வது" என்பது....அதாவது பகுத்தறிவு . இந்த மனப்பான்மையை நான் வரவேற்கிறேன் . ஆனால் இந்த பகுத்தறிவு வேதத்தின் எல்லா பகுதியிலும் apply செய்யப்படவேண்டும் . Selective ஆக apply செய்வதுதான் பிரச்சனை .

@:தீருவின் ராஜா ஒரு மனிதன். அவன் இறக்கைகளுடன் கூடிய கேருபின் அல்ல.

சரி , அப்படியே வைத்துக் கொள்வோம்...

@:எனவே இந்த வார்த்தைகள் அவரை பார்த்து சொல்லப்படாமல் அவருக்குள் இருந்து கிரியை செய்த சாத்தானை பார்த்தே சொல்லப்பட்டிருக்கிறது.

அவருக்குள் இருந்து கிரியை செய்தது , "சாத்தான்தான்" என்ற முடிவுக்கு வர முகாந்திரம் என்ன என்பதுதான் கேள்வி....
தீருவின் ராஜாவை மனிதன் என்று declare செய்துவிட்டு.........." நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப்" என்ற வார்த்தகளை வாசிக்கும் பொழுது , தீர்க்கதரிசியின் வார்த்தைகளில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டாமல் , எதையாவது இடை சொருகி , தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உண்மைப்படுத்த முயற்சிக்கும் செயல் எத்தகையது ?

நான் உங்களை சொல்லவில்லை . இப்படி சொல்லி வரும் நம் இறையியலாளர்களை சொல்லுகிறேன் .

ஏன்.....கரத்தர் தீருவின் ராஜாவை கேருப் ஆக மாற்றியிருக்க முடிபாதா ? ஒரு வேளை அப்படி மாற்றி அதை தீர்க்கதரிசி வாயிலாக சொல்லியிருந்தாரென்றால் ..?
இந்த கோணத்தில் ஏன் சிந்திக்கக்கூடாது ?
Posted by: Vickyalpha
« on: October 21, 2018, 09:35:45 PM »

@reply 27
ஆதாம் ஏவாளுக்கு பிறகு ஏதேனுக்கு எந்த மனிதரும் வந்து ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது என்றுதான் கடவுள் கெருப்பீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் பாதுகாவலாக வைத்தார். அப்படி இருக்கும் போது தீருவின் ராஜா எப்படி ஏதேன் தோட்டத்தில் இருந்திருக்க முடியும்??
Posted by: Vickyalpha
« on: October 21, 2018, 09:23:59 PM »

@reply 26

2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:2

Posted by: udaya
« on: October 21, 2018, 08:51:49 PM »

நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்.....

என்ற வசனத்திற்கு reply#22 ல் ஒரு interpretationஐ கூறியிருக்கிறேன்.
Posted by: udaya
« on: October 21, 2018, 08:24:49 PM »

சர்ப்பம் இருந்ததாகத்தான் வேதாகமம் கூறுகிறது. அதை சாத்தான் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறேன். இருப்பதை அப்படியே ஏன் எடுத்துக் கொள்ள கூடாது.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

மத்தேயு 5
Posted by: Vickyalpha
« on: October 21, 2018, 08:07:27 PM »

13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது, நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 28:13

"நீ ஏதேனில் இருந்தவன்" ஏதேனில் சாத்தான் இருந்தானே brother.
Posted by: udaya
« on: October 21, 2018, 01:50:35 PM »

தீரு ராஜாவிடமும் ,
தீரு ராஜாவுக்குள் இருக்கும் சாத்தானிடம் பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் , என்று கூறுகிறீர்கள். சரி.....

2ம் வசனம் யாருக்கு சொல்லப்பட்டது என்று கூறமுடியுமா ?

ஏசாயா 14 : 12-15 ஐ குறிப்பிட்டருக்கிறீர்கள்.....

நேரடியாக சொல்லப்படும்
வசனங்களை உள் அர்த்தத்துடன் பார்க்க முற்பட்டால் ,
ஏசாயா 14 : 12-15 , இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று கூட கூறலாம்.

இயேசு கிறிஸ்துதான் வானத்திற்கு
ஏறுவேனென்றும் மேகங்கள் மேல் வருவேனென்றும் உன்னதருக்கு ஒப்பாவேனென்றும் கூறினார் .(மத்தேயு 26 :64 )

தன்னை பிதாவுக்கு இணை படுத்தி பேசினார்.(மத்தேயு 28 :18, யோவான் 14 :9 )

ஜாதிகளை ஈனப்படுத்தினார் (மாற்கு 7:25-30).

வானத்தை விட்டு பூமிக்கு வந்தார்.மரித்து பாதாளத்தில் இறங்கினார் .

தன்னை விடிவெள்ளி என்றார்.(வெளிப்படுத்தின விசேஷம் 22 :16)

எனவே எசாயா 14:12-15 இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ?

நமக்கு போதித்தவர்கள் இது சாத்தானைக் குறிக்கிறது என்று கூறியதால் நாமும் அவ்வாறே வைத்துக் கொண்டோம் . அவ்வளவே.


Posted by: Vickyalpha
« on: October 21, 2018, 03:43:12 AM »

Brother நான் சொல்ல வருவதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

தீருவின் ராஜாவை நான் சாத்தான் என்று சொல்லவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால்
எசேக்கியல் தீருவின் ராஜாவிடம் காரியங்களை சொல்லும்போது , அவர் ராஜாவிடம் மட்டும் பேசாமல், ராஜாவின் உள்ளே இருந்து கிரியை செய்யும் சாத்தானை பார்த்தும் பேசுகிறார்.
உதாரணத்திற்கு இயேசு பேதுருவிடம் "பின்னாக போ சாத்தானே" என்று சொன்னப்பொழுது அவர் பேதுருவிடம் பேசாமல் , அவனுக்குள் இருந்த சாத்தானிடமே பேசினார் என்று புரிந்துகொள்ளலாம். அதே போல் இவர் ராஜாவிடம் பேசும்போது ராஜாவுக்குள் இருக்கும் சாத்தானிடம் சொல்வதுதான் எசேக்கியல் 28 : 12,13,14,15 வசனங்கள்.
இதே போன்ற ஒரு பதம் ஏசாயா 14: 12,13,14,15 வசனங்களில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதை காணலாம்.
" நீ அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்" என்று எசே 28:14 வசனத்தில் வாசிக்கிறோம். கேருபின்கள் பெரிய இறக்கைகளுடன் கூடிய சிருஷ்டிப்புகள்.
அவைகள் மனிதர்களை குறிப்பதில்லை.
தீருவின் ராஜா ஒரு மனிதன். அவன் இறக்கைகளுடன் கூடிய கேருபின் அல்ல. எனவே இந்த வார்த்தைகள் அவரை பார்த்து சொல்லப்படாமல் அவருக்குள் இருந்து கிரியை செய்த சாத்தானை பார்த்தே சொல்லப்பட்டிருக்கிறது.
இதுவே நான் புரிந்து கொண்ட விளக்கம் brother.