General Category > Tamil Bible

😍 காதல் ❤ (Relationship)

<< < (12/15) > >>

wilsonjoe:
Aloheem enbavar yar....???

kishore jesus:
தேவனின் பிள்ளைகள் காதலிப்பது தவறா? அதுவும் உண்மையான அன்புதானே? உண்மையான காதல் என்ன தவறா?
அன்பை நான்கு 'பெரிய வகையாக'ப் பிரிக்கலாம்

[1] Agape = God's love - தேவனின் அன்பு
[2] Philia= brotherly love - சகோதரத்துவ அன்பு
[3] Eros = romantic love - காதல் என்னும் அன்பு
[4] Storge = parents love towards their children. - குடும்பம்: பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு.

உண்மையான அன்பு தேவனின் அன்பு மட்டும் தான் (Agape love). தேவனுடைய அன்புடன் ஒப்பிடும்போது காதல் என்பதும் உண்மையான அன்பு அல்ல.

மனிதர்களின் அன்பு என்பது "காரணங்களை/நிபந்தனைகளை" அடிப்படையாகக் கொண்டு உள்ளது (conditional love). தேவனின் அன்பு நிபந்தனையற்றது (Unconditional love). நாம் கறுப்போ, வெள்ளையோ, குட்டையோ, மிக உயரமோ, ஏழையோ எப்படி இருப்பினும் அவர் நம்மை நேசிக்கிறார். நீங்கள் "ஏன் இவர் அந்த நபரைமட்டும் காதலிக்கின்றார்?" என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு பதிலாக சில காரணங்கள் இருக்கும் (தோற்றம், குணம், நிறம், பணம்... என ஏதோ). காதல் என்பது Eros என்னும் [3]ம் வகையைச் சேர்ந்தது. அதில் "கண்களின் இச்சை" (lust of the eye) உள்ளது. இச்சை தவறு என்று வேதம் சொல்லுகிறது, என்றால் காதலிப்பது?

பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தன் கண்ணுக்கு பிரியமான ராகேலைத் லாபானின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டான், ஆனால் அதில் சில சிக்கல்கள். சிம்சோனின் பெற்றோர் அவன் விருப்பத்தை எதிர்த்தனர். அவன் மனைவி வேறொருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். தேவன் மோசேயுடன் பேசும்போது கூட "ஒரு பெண் நியமிக்கப்பட்டால்.." என்று வாசிக்கிறோம்.

ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடியதை அறிவோம். யூதர்களின் முறையில் நிச்சயதார்த்தம் செய்தபின்தான் திருமணம் நடைபெற்றது. ரூத் என்னும் சரித்திரமும் அப்படியே சொல்கின்றது. இயேசுவின் தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள் என்று அறிவோம். இயேசு அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து நமக்கு உதாரணமாக இருந்துள்ளார். கானாவூர் கலியாணத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். தமிழ் நாட்டில் இந்து, முஸ்லீம் என்னும் மதங்களிலும் கூட நிச்சயித்து திருமணம் செய்வது பொதுவான பழக்கம். வெளிநாடுகளில் தேவ பயமில்லை, எனவே நிச்சயம் செய்து திருமணங்கள் நடப்பது மிகவும் குறைவு.

நீங்கள் காதலிப்பதை தேவன் தடை செய்வதில்லை. ஆனால் அதற்குப்பின்வரும் விளைவுகளுக்கு அவர் பொறுப்பும் அல்ல. எனவே அவரிடம் போய் புகார் செய்யாதீர்கள்.

ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு சொன்னார். விபசாரம் என்பது திருமணத்துக்குப் பின், வேசித்தனம் என்பது திருமணத்துக்கு முன் பாலியல் பாவம். உங்கள் சரீரங்களை வேசித்தனத்திற்கு ஒப்புக்கொடாதிருங்கள். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் குற்றமற்றதாய் காணப்படுவதாக என்று வாசிக்கிறோமே.

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. இது ஒரு முக்கிய காரணம். பழைய ஏற்பாட்டில் "சேத்" சந்ததி தேவ புத்திரர் என்று அழைக்கப்பட்டார்கள். காயீன் சந்ததி மனுஷ குமாரர் என்றழைக்கப்பட்டார்கள். தேவபுத்திரர் மனுஷகுமாரர்களின் பெண்கள் அழகுள்ளவர்களாயிருந்தபடியால் அவர்களை பெண்கொண்டார்கள். அதன் பின் வந்த சந்ததியின் பாவம் திரளாயிருந்ததால், தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார்.

II கொரி 6:17,18
17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

காதல் என்பது உண்மையான அன்பு அல்ல, அது சில வரம்புகளுக்குட்பட்டது, தேவனுடைய அன்பு மட்டும் உண்மையானது, இவ்வுலகிலும், விண்ணுலகிலும்!

எனவே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல் இருப்போமாக. மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.

manovah .T:
LOVE
it is a intresting topic  to disscuss .

bible promote love ,no one says it is false but here the problem is fake love ,that means for the time pass , sex, to be entertained, one side cheating, immaturity love but,
true love is always welcomed in the bible ,like adam and his eve .... it  is true love .even men can't say no to the true love .... its lasts forever anywhere ,anytime.....
true love changes you its promote even your belif,faithfulness ....so
I  strongly recomend to LOVE (true love)a girl when you assured she is loving u truely....
                        GOD BLESS YOU

rthangaraj:
சகோதரத்துவ அன்பையே வேதம் வெளிப்படுத்துகிறது. ஒரு பெண்ணை பிடித்திருந்தால் திருமணம் செய்வதே நல்லது பெற்றோர் சம்மதத்துடன்.  ஆனால் இறுதி முடிவு பெற்றோர் களிடமே உள்ளது. மற்றும் வேதம் மனிதர்களுக்குள் சாதி வேறுப்பாட்டையும் விரும்புவதே இல்லை. இறைவனுக்கு முன் அனைவரும் சமம்.  ஒருவருடைய பிறப்பினால் வேறுபாட்டை வேதம் பார்ப்பதில்லை. தாழ்தோரும் இல்லை உயரந்தோரும் இல்லை. செய்யும் செயலின் மூலமாகவே வேறுபடுகிறார்.

love_all:
நையாண்டி பதில் என்றாலும் அருமை சகோதரா..

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version