General Category > Tamil Bible

பரலோகத்தில் யூதாஸ்காரியோத்து

<< < (2/15) > >>

udaya:
Your reply for the first part of my question is GOOD & VALID.
However , you ignored the second part !

susan paul:
Excuse me that's our knowledge stage .... I may think bad but which is correct more than me God knows ....

udaya:
It's OK.

Selvamvijayan:
யூதாஸ் பாத்திரம் இல்லை எனில் சிலுவை மரணம் இல்லை. ஆண்டவருக்கு யூதாஸின் செயல்பாடுகள் தெரிந்தே இருந்தது. எனவே ஆண்டவரின் வெளிப்பாடுக்கு யூதாஸும் காரணம் தானே?

udaya:
யூதாஸ் பாத்திரம் கடவுளின் சித்தத்தின்படி உருவான ஒரு பாத்திரம் என்று கொண்டால்........

சிலுவை மரணம் பிதாவால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று
என்று வைத்துக்கொண்டால்........

இந்த உலகில் அனைத்தும் அவர் சித்தப்படிதான் நடக்கிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நன்மை தீமை ,  வறுமை செழுமை , துன்பம் இன்பம் , வாழ்வு தாழ்வு , சுகம் சுகவீனம் என அனைத்திற்கும் காரணர் அவரே என்றும்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் ,  நல்ல நிகழ்வுகளுக்கு கடவுள் காரணம் என்றும் , தீய நிகழ்வுகளுக்கு மனிதனின் செயல்பாடுகள்தான் காரணம் என்ற கருத்து , யூதாஸ் பாத்திரம் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளது.

நல்லதோ கெட்டதோ , பிதாவின் சித்தத்தின்படி செய்யவேண்டுமே தவிர , வேண்டுதல்- ஜெபம் என்ற பெயரில் அவரை நோக்கி கூப்பிட்டு , அவர்தம் சித்தத்தை மாற்றிக்கொள்ள வேண்டுகோள் விடுப்பது பயன் அற்றது , எனும் செய்தி , மத்தேயு 7:21 வழியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

யூதாஸ் செய்யப்போவதை ஆண்டவர் ஏற்கனவே  அறிந்திருந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம் ,
ஆதாம் செய்யப்போவதை கர்த்தர் ஏற்கனவே  அறிந்திருந்தார் என்று ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏனோ ?!?!

புரிகிறது........

ஆதாம் செய்யப்போவதை கர்த்தர் ஏற்கனவே  அறிந்திருந்தார் என்று ஏற்றுக்கொண்டால் * கிறித்துவம் * அர்த்தமற்றதாகிவிடும் என்று புரிகிறது.....

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version