General Category > Tamil Bible

பரலோகத்தில் யூதாஸ்காரியோத்து

(1/13) > >>

udaya:
அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 19 :28

நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார். லூக்கா 22 :30

மேற்கண்ட வசனங்கள் யூதாஸும் பரலோகம் செல்வதை உறுதி செய்கிறது .
குறிப்பாக லூக்கா 22 :30 ஐ இயேசு சொல்லும்போது , யூதாஸ் செய்யப்போகும் காரியம் இயேசுவுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது புலனாகிறது . தெரிந்தும் அவ்வாறு கூறியிருக்கிறார் .

இது சற்று முரணாக இருப்பது போல தெரிகிறது .

மாற்று கருத்துக்கள் , விளக்கங்கள் ஏதேனும் உண்டா ?

udaya:
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7 :21

யூதாசு , பிதாவின் சித்தத்தின்படி செய்ததினால் , மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் பரலோக அனுமதி கிடைத்திருக்கும் என்று கருதலாமா ?

susan paul:
Ya sure

udaya:
அப்படியானால் , ஒருவன் பிதாவின் சித்தத்தின்படி தீமை செய்வானேயாகில் (தீமை என்று நாம் நினைக்கும் செயல் ) அவன் பரலோகம் செல்ல முடியமா ?

ரட்சிப்பு , ஞானஸ்நானம் , மறுபடியும் பிறத்தல் , சிறுபிள்ளைகள போலாதல் , செல்வத்தை விற்று ஏழைகளுக்கு கொடுத்தல் , வேதபாரகர் பரிசேயர் இவர்களைக் காட்டிலும் அதிக நீதி.......போன்றவைகளை பற்றியெல்லாம்  கவலைபடதேவையில்லை போலிருக்கிறது.

susan paul:
Judas did Gods will but its not good in our sight. If we his life later he felt sorry for that so I am sure that he will enter the kingdom of God ...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version